தொழிலாளர் தினத்தில் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு விஷேட பிரார்த்தனை

Report Print Nesan Nesan in சமூகம்

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்காக விஷேட பிரார்த்தனை கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டியும், காயமுற்று சிகிச்சைபெற்று வரும் அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டியும் நினைவுச் சூடரேற்றி பிரார்த்தனை நடைபெற்றுள்ளன.

இதன்போது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் பிரார்த்தனையில் கலந்துகொண்டமை குறிப்பி்த்தக்கது.

கிளிநொச்சி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் மற்றும் இதன்போது காயமடைந்தவர்கள் குணமடையவும் வேண்டி கிளிநொச்சியில் இன்று விசேட வழிபாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது வடமாகாண இணைத்தலைவர் ஆ. புண்ணியமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - யது, நேசன்

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்