இலங்கை குண்டு வெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்காக பிரித்தானியாவில் மௌன அஞ்சலி

Report Print British Tamil Forum British Tamil Forum in சமூகம்

மத்திய லண்டனில் அமைந்திருக்கும் தேவாலய வளாகத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று மாலை மெழுகுவர்த்தி அஞ்சலி ஆராதனை 6 மணி தொடக்கம் 8 மணிவரை இடம்பெற்றது.

இந் நிகழ்வை பிரித்தானிய தமிழர் பேரவையின் அரசியல் பரிந்துரைப்பு இணைப்பாளர் (Political Advocacy Coordinator) செந்தில்குமார் மௌன அஞ்சலியுடன் தொடக்கி வைத்துள்ளார்.

இதில் கலந்து கொண்ட பல்லின, மத மக்களும் ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் உயிர்த்த ஞாயிறன்று அந்தோனியார் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு மலரஞ்சலியுடன் மெழுகுவர்த்தி ஆராதனை செலுத்தியுள்ளனர்.

குறிப்பாக இந் நிகழ்வில் Romford baptist church ஐ சேர்ந்த Ade Ogunleya (Deacon of Romford Baptist church ) மற்றும் பாதர் எல்மோ ஜெயராசா ஆகியோரின் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

குறிப்பாக குறுகிய கால அறிவித்தலில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இறுதியாக பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை உதவி இணைப்பாளர் (Human Rights Coordinator) சாமினியின் இரங்கல் உரையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்