பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு நீராகாரங்கள் வழங்கும் தமிழ் இளைஞர்கள்

Report Print Nesan Nesan in சமூகம்

நாட்டின் பல இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து காணப்படும் அவசரகால நிலைமையால் பாதுகாப்பு படையினர் நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கல்முனை பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருக்கு கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையால் குடிநீர் போத்தல்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 350க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers