குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் முன்னெடுப்பு

Report Print Theesan in சமூகம்

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி நாட்டின் பல பகுதிகளிலும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வவுனியா மரக்கறி வியாபார சந்தையில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது.

குறித்த இந்நிகழ்வில் வெடிகுண்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல இடங்களிலும் கடைகள் மூடப்பட்டு வௌ்ளை மற்றும் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்