தீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்ட மக்களுக்கு பரந்தனில் அஞ்சலி

Report Print Kaviyan in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு பரந்தனிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு பரந்தன் பேருந்து தரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர், பரந்தன் வர்த்தகர்கள், பரந்தன் மக்கள் என பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்து இரண்டு நிமிட அக வணக்கமும் செலுத்தினர்.

இதேவேளை, அஞ்சலி நிகழ்வுக்காக பரந்தன் வர்த்தகர்கள் தங்களது கடைகளை காலை 10.00மணி வரை பூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers