கம்பரலிய வேலைத் திட்டம் மக்கள் பாவனைக்கு

Report Print Navoj in சமூகம்

அரசாங்கத்தின் எட்டாயிரம் கோடி 'கம்பரலிய' பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட வீதிகள், வடிகாண்கள், அணைக்கட்டுக்கள், மைதான புனரமைப்பு, வாராந்த சந்தை என்பன பிரதம அதிதியாக கலந்து கொண்ட விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கம்பரலிய வேலைத் திட்டத்தில் 327 இலட்சம் ரூபாய் செலவில் 28 வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.எம்.தையூப், எம்.எல்.நபீரா, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்