நுவரெலியாவில் உருவாகும் புதிய மும்மொழி பாடசாலை

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா - நானுஓயா பகுதியில் புதிய மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ள பகுதிக்கு இன்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஷ்ணன் விஜயம் செய்துள்ளார்.

அவரின் இந்த விஜயத்தில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற வேலைத்திட்டத்தின் செயல் திட்ட பணிப்பாளர் பத்மன் தலைமையிலான கட்டட கலைஞர் பொறியிலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த பாடசாலையை நிர்மாணிப்பதற்காக சுமார் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை வெகுவிரைவில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுளளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்