வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தீபாவளி திருநாள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - கந்தசாமி ஆலயத்தில் தீபாவளி திருநாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

வவுனியா மாவட்ட செயலகமும், இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரும் இணைந்து இந்த நிகழ்வினை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது கந்தசாமி ஆலய முன்றலில் இராணுவத்தினர் மற்றும் அரச அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வும், ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றதுடன், இராணுவ அதிகாரிகளுக்கு இந்து மத குருமாரால் ஆசியும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, வன்னி படைத்தள கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வர்த்தக சங்கத்தலைவர் சி.சுஜன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.


மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்