சிறப்பாக இடம்பெற்ற பிரதேச இலக்கிய விழா

Report Print Ashik in சமூகம்

மாந்தை மேற்கு பிரதேச செயலக கலாச்சார பேரவை மற்றும் கலாச்சார அதிகார சபையினால் பிரதேச இலக்கிய விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் - அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனையுடன் இந்த விழா இடம்பெற்றுள்ளது.

இந்த விழாவில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மடு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.சத்தியபாலன், மாவட்ட அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் பி.எம்.செபமாலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

யேசுதாசன் சாரா நீராஜா (சித்திரக்கலை), சி.பெலிக்ஸ் ஜெனிவர் (சித்திரக்கலை), எ.டெலிஸ்ரன் நிஸாந் (மிருதங்க இசை) ஆகிய மூவருக்கும் இளம் கலைமதி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தியாப்பிள்ளை அருளானந்தம், பெரியசாமி முத்துக்கருப்பன், முஹமட் இமாம் ஹன்பர், வேலு சந்திரகலா, கிறிஸ்தோகு சந்தியோகு ஆகிய ஐவருக்கு கலைமதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்