கோலாகலமாக ஆரம்பமானது நல்லூர் உற்சவம்! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

Report Print Murali Murali in சமூகம்

இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகியது.

மகோற்சவத்தின் முதல் நாளான இன்று கொடியேற்ற நிகழ்வு முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்றனர்.

முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிஷேகங்களும் வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்றது. பின்னர் 10 மணிக்கு, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து, கொடிமரத்துக்கான கிரிகைகள் இடம்பெற்று, முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில், இன்று முதல் தொடர்ச்சியாக 25 நாட்களுக்கு நல்லூர் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers