வாழைச்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய ஆடிப்பூர பிரமோற்சவ பெருவிழாவின் இறுதி நாள் பூஜை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, பக்தர்களின் தீ மிதிப்புடனும், அம்பாளின் தீர்த்தோற்சவம் நடத்தப்பட்டுள்ளது.

பாசிக்குடா கடற்கரைக்கு அடியார்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து அம்பாள் கல்குடா வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடற்கரையில் விசேட பூஜை நிகழ்வுகள் பெற்றுள்ளன.

கடந்த 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து 9 நாட்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் ஆலய நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், மகோற்சவ பிரதம குரு சிவாகம கிரியா ரெத்தினம் பிரம்மஸ்ரீ நா.ஹரிந்திர குருக்கள் தலைமையில் மகோற்சவ திருவிழாக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers