செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீடு

Report Print Rakesh in சமூகம்
38Shares
38Shares
ibctamil.com

கொழும்பு தமிழ் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அனந்த் பாலகிட்ணர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதேவேளை, இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், ஊடகத்துறை சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்