யாழில் குள்ள மனிதர்களின் நடமாட்டம்? கடும் அச்சத்தில் மக்கள்

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், நேற்று இரவும் இது போன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ். வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அராலிப் பகுதியில் இவ்றான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இங்கு குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட்டு தெற்கு, முதலிகோவிலடியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாகனச் சத்தம் கேட்டதாகவும், பின்னர் வீட்டின் மேல் நடந்து திரியும் சத்தம் கேட்டபோது வெளிச்சத்தை பாய்ச்சி தேடியபோது நபர் ஒருவர் நடப்பதுபோன்று இருந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டபோது வீட்டின் மேலிருந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்பகுதியில் கிராமத்திற்குள் புதிதாக சில நபர்கள் நடமாட்டம் இருந்ததாகவும் மக்கள் குறைவாக உள்ள பகுதிகளில் இவ்வாறானவர்கள் நடமாடித் திரிந்துவிட்டு இரவில் கற்கள் எடுத்து வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் எதுவும் இல்லை. இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்