வில்லங்கத்தில் ஆரம்பித்த விஸ்வரூபம் 2: படத்திற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Report Print Vijay Amburore in சினிமா

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்து, இயக்கிய திரைப்படம் விஸ்வரூபம் 2. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில், பூஜாகுமாரி, ஆண்ட்ரியா நடித்துளள்னர்.

இந்த நிலையில் பிரமீட் சாய்ரா என்னும் நிறுவனமானது விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், கடந்த 2008-ம் ஆண்டு "மர்மயோகி" என்னும் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ராஜ்கமல் இன்டர்நெஷனல் நிறுவனத்திற்கு ரூ.6.90 கோடி வழங்கப்பட்டதுடன், படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக நடிகர் கமலுக்கு முன்பணமாக ரூ.4 கோடி வழங்கப்பட்டது.

ஆனால் அந்த பணத்தினை கமல் இதுவரை திருப்பி கொடுக்கவில்ல. அந்த பணம் தற்போது வட்டியாக ரூ. 5.44 கோடியாக உயர்ந்துள்ளது. அதனை திருப்பி கொடுக்காமல் வரும் 10-ம் தேதி கமல் நடித்து வெளியாக உள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக "மர்மயோகி" படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுக்கு வழங்கப்பட்ட ரூ.6.90 கோடி "பணத்தை உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு பயன்படுத்தியதாக பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்