கனடாவில் 16 வயது சிறுமி கொலை வழக்கில் 17 வயது நபர் குற்றவாளி என நிரூபணம்! புகைப்படத்துடன் முழு தகவல்

Report Print Raju Raju in கனடா
11118Shares

கனடாவில் 16 வயது சிறுமி கொலை வழக்கில் கைதான 17 வயது நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Saskatchewan-ஐ சேர்ந்தவர் Erica Hill O'Watch (16). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஒரு பெண் மற்றும் ஆணின் சத்தம் பலமாக கேட்டதாக அருகில் வசித்தவர்கள் அப்போது கூறினர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பொலிசார் 15 வயது சிறுவனை கைது செய்தனர்.

அவன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவனுக்கு 17 வயது ஆகிறது, இதையடுத்து பெரியவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை கூட தரப்படலாம் என கூறப்படுகிறது.

எப்படியிருந்தாலும் இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின்படி குற்றவாளியின் பெயர் மற்றும் இன்னபிற விபரங்கள் வெளியிடப்படாது என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்