சீனாவுக்கு எரிச்சலையூட்டும் அடுத்த நாடு... ஹொங்ஹொங் நாட்டவர்களை வரவேற்க திட்டம் தயார்

Report Print Balamanuvelan in கனடா
256Shares

ஏற்கனவே ஹொங்ஹொங் விடயத்தில் கருத்து தெரிவித்ததற்காக அமெரிக்க மற்றும் பிரித்தானியா மீது சீனா கடுங்கோபத்தில் இருக்கும் நிலையில், இப்போது கனடாவுமசீனாவின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியுள்ளது.

ஹொங்ஹொங் நாட்டு இளைஞர்கள் கனடாவில் வேலை செய்ய, படிக்க, வாழ, எளிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது கனடா.

இதனால் சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உரசல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடாவின் உள்துறை அமைச்சரான Marco Mendicino, ஹொங்ஹொங் நாட்டவர்கள் கனடாவில் பணி உரிமம் பெற விண்ணப்பிக்கும் திட்டம் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கும் திட்டங்கள் குறித்து தகவல் வெளியிட்டார்.

ஹொங்ஹொங் மக்கள் சிக்கலான காலகட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கனடா அவர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நிற்கும் என்றார் அவர்.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கனேடிய அதிகாரிகள், அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், சீன தொலைதொடர்பு நிறுவனமான Huaweiயின் அதிகாரி Meng Wanzhouவை கைது செய்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் உரசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, இரண்டு கனேடியர்களை கைது செய்தது சீனா.

இப்படியிருக்கும் நிலையில், தற்போது ஹொங்ஹொங் மக்களுக்கு உதவ கனடா திட்டம் ஒன்றை அறிவித்துள்ளதால், இரண்டு நாடுகளுக்குமான உறவில் கடுமையான விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jennifer Gauthier/Reuters

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்