நான் இப்படி தான் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றேன்! தீபாவளி வாழ்த்துடன் கனடா பிரதமர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

Report Print Basu in கனடா
533Shares

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உண்மை, ஒளி, நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது.

அந்த நம்பிக்கையான செய்தியைக் கொண்டாடவும், இந்த முக்கியமான திருவிழாவைக் குறிக்கவும், நான் இன்று மாலை காணொளி காட்சி மூலம் கொண்டாட்டத்தில் பங்கேற்றேன்.

கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! என ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுடன் சிறிய பானை விளக்குளில் தீப ஒளி ஏற்றும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என ட்ரூடோ சூசகமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்