கனடாவில் அதிகாலையில் நடந்து சென்ற 15 வயது சிறுமி உயிரிழப்பு! 17 வயது சிறுவனால் நேர்ந்த துயரம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் அதிகாலை 3.30 மணிக்கு சாலையில் நடந்து சென்ற 15 வயது சிறுமி கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Debden கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், அதிகாலை 3.30 மணிக்கு 15 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இரண்டாவது அவென்யூ வழியாக சென்று கொண்டிருந்த சிறுமி மீது கார் ஒன்று வேகமாக மோதியது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்தார்.

சிறுமி மீது மோதிய காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.

தடயவியல் புனரமைப்பு நிபுணர்கள் உதவியுடன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்