கனேடிய குடும்பங்களுக்கு பிரதமர் ட்ரூடோ அளித்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடிய குடும்பங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளார்.

கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழும் பட்சத்தில், அவர்கள் கனடா வர தனது அரசு அனுமதியளிப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் குடும்ப உறுப்பினர்களுக்காக சிறிது நெகிழ்த்தப்படுகின்றன.

என்றாலும், நாட்டுக்குள் நுழைவோர் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலக்கு கனேடியர்களின் கணவன் அல்லது மனைவி, இணைந்து வாழ்வோர், குழந்தைகள், பெற்றோர் மற்றும் சட்டப்பூர்வ பாதுகாவலர்களுக்கு பொருந்தும்.

ஆனால், நாட்டுக்குள் வருபவர்கள் குறைந்தது 15 நாட்களாவது தங்க வேண்டும் என்று புலம்பெயர்தல் துறை அமைச்சர் Marco Mendicino தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைக்கருகே நெருங்கிய உறவினர்கள் அமர்ந்து, எல்லையை தாண்டாமல் கண்ணீர் மல்க பேசிக்கொள்வதைக் காணலாம்.

இத்தனைக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் வேலி கிடையாது. என்றாலும் எல்லைக் கட்டுப்பாடுகளை மதித்து எல்லையை தாண்டாமல் மக்கள் அமர்ந்து பேசிக்கொள்வதை அந்த வீடியோவில் காணலாம்.

இனி அவர்களுக்கு அந்த தொல்லை இல்லை, சட்டப்பூர்வமாகவே அவர்கள் கனடாவிலிருக்கும் தங்கள் உறவினர்களை வந்து சந்திக்கலாம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்