கனடாவில் ஓடும் பேருந்தில் இளம்பெண் அருகில் உட்கார்ந்த நபர் செய்த மோசமான செயல்! வெளிவந்த பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா
2651Shares

கனடாவில் ஓடும் பேருந்தில் இளம்பெண் அருகில் அமர்ந்த இளைஞன் அவரிடம் தவறான நடந்து கொண்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Halifax Transit பேருந்தில் தான் இச்சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடந்துள்ளது.

Eastern Passageல் இருந்து Bridge Terminal வரை செல்லும் பேருந்தில் இளம்பெண்ணொருவர் பயணம் செய்தார்.

அதில் ஏறிய இளைஞன் ஒருவன் அப்பெண் அருகில் வந்து உட்கார்ந்து அவரை பாலியல் ரீதியாக தொட்டு மோசமாக நடந்துள்ளான்.

பின்னர் அப்பெண் பேருந்தில் இருந்து இறங்கி சென்ற நிலையில் தனக்கு தெரிந்த நபரிடம் இது குறித்து கூறினார்.

இதையடுத்தே இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதை பொலிசார் வெளியிடவில்லை.

அவரிடம் தவறான முறை நடந்த நபர் கருப்பாக இருப்பார் எனவும் வயது 30களில் இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் அணிந்திருந்த உடைகள் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார் இளைஞன் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்