கனடாவில் ஆசிய சிறுவன் மீது தாக்குதல்... வீடியோ வெளியானதைத் தொடர்ந்து குவியும் ஆதரவு!

Report Print Balamanuvelan in கனடா
418Shares

ஆசிய கனேடியரான சிறுவன் ஒருவன் கொரோனாவைப் பரப்பியதாக அவன் மீது தாகுதல் நடத்தப்பட்டதாக Saskatoon பொலிசில் புகாரளிக்கப்பப்பட்டுள்ளது.

Bishop James P. Mahoney Park பகுதி வழியாக Nelson Chen என்பவரது 15 வயது மகன் சைக்கிளில் செல்லும்போது, அவனை ஒருவர் இனரீதியாக விமர்சித்ததோடு, சாபமிட்டிருக்கிறார்.

அந்த சிறுவன் கொரோனாவைப் பரப்புவதாக குற்றம் சாட்டியிருக்கிறார் அவர். அந்த நபரை Chenஇன் மகன் தனது மொபைலில் புகைப்படம் எடுக்க, உடனே அவனைத்துரத்தி, அவனது சைக்கிளைப் பிடித்து கீழே தள்ளி அவனது தலைக்கவசத்தின் மீது குத்தியிருக்கிறார் அந்த நபர்.

தன் மீதான தாக்குதலை அந்த சிறுவன் வீடியோ எடுத்துள்ளான். தன் மகனுக்கு இந்த தாக்குதலில் காயங்கள் ஏற்படவில்லையென்றாலும், அவன் மிகவும் அதிர்ந்துபோயிருப்பதாக தெரிவிக்கிறார் Chen.

அந்த சிறுவன் எடுத்த வீடியோ பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், 3000 முறை அது பகிரப்பட்டதோடு, 118,000 முறை அது பார்வையிடப்பட்டுள்ளது.

தான் 30 ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு குடிபெயர்ந்ததாக தெரிவிக்கும் Chen, மக்கள் தன் மீது காட்டிய அன்பினாலேயே தான் கனடாவை விட்டுச் செல்லவில்லை என்கிறார்.

இதுதான் எங்கள் வீடு என்று கூறும் Chen, யாரும், எதுவும், அதை மாற்றமுடியாது என்கிறார்.

அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஏராளமானோர் Chen குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

அச்சுறுத்தக்கூடியதான இத்தகைய சூழலில், மக்கள் தனக்கு காட்டிய ஆதரவுக்காக அந்த சிறுவனும் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளான்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்