கொரோனா வைரஸ் நோய்களின் அசுரன்! கணவரை பறிகொடுத்துவிட்டு விதவையான கனடிய பெண் கண்ணீர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மளிகை கடையில் பணிபுரிந்த நபர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் விதவையான அவர் மனைவி கண்ணீருடன் பேசியுள்ளார்.

ஒன்றாறியோ மாகாணத்தின் ஒஷாவா நகரில் உள்ள சூப்பர் ஸ்டோர்ஸ் மளிகை கடையில் பணிபுரிந்து வந்த Keith Saunders என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வியாழன் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனது அன்பு கணவரை இழந்து விதவையாக நிற்கும் Keith-ன் மனைவி Katy கொரோனா வைரஸ் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் துரதிஷ்டவசமாக என் ஆன்மாவாக இருந்த Keith-ஐ இழந்து விட்டேன்.

என் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட போது அவர் சிறுநீரகம் தொடர்பான சிகிச்சையில் இருந்தார்.

கொரோனா வைரஸ் நோய்களின் அசுரன். நீங்கள் கொரோனாவை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடினீர்கள், விரைவில் நாம் ஒன்று சேருவோம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்