கனடாவில் பெண்ணை ஏமாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்ட நபர்! முதல் முறையாக வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த நபர் தன்னை பெரிய முதலீட்டாளர் என பெண்ணை நம்ப வைத்து பெரியளவில் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

ரொரன்ரோவை சேர்ந்தவர் Arash Mahdieh (38). இவர் பெண்ணொருவரிடம் தன்னை பெரிய முதலீட்டாளர் என அறிமுகப்படுத்தி கொண்டார்.

இதையடுத்து Arash-ஐ நம்பிய அப்பெண் அவரிடம் $59,000 பணத்தை கொடுத்து முதலீடு செய்ய சொன்னார்.

முதலீடு செய்த பணத்தை விட அதிக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அப்பெண் இந்த விடயத்தை செய்தார்.

ஆனால் பிறகு Arash நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்.

அப்போது பணத்தை முதலீடு செய்துள்ளதால் தற்சமயம் திருப்பி தரமுடியாது என Arash கூறினார்.

இந்த விவகாரம் பொலிசாரின் கவனத்துக்கு சென்ற நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் 10ஆம் திகதி Arash கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவரின் புகைப்படங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை பொலிசார் வெளியிடாமல் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் முறையாக Arash-ன் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இதோடு அவரின் உண்மையான பெயர் Arash Mahdieh என தெரியவந்துள்ளது.

Arash Mahdieh மேலும் பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது தொடர்பிலான விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறி தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர்.

Toronto Police Service

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்