குழந்தை பெற்று வீடு திரும்பும் வழியில் குழந்தையை கவனித்த தாய்: பின்னர் தெரியவந்த திடுக்கிடவைக்கும் உண்மை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பெண்ணொருவர் பிரசவித்து வீடு திரும்பும் வழியில், தான் வைத்திருக்கும் குழந்தை தன்னுடையதில்லை என்பதைக் கண்டுபிடித்தார்.

ஆனால், அதே மருத்துவமனையில், அதே காலகட்டத்தில் மாறிய இரு பிள்ளைகளுக்கு, 50 வயதாகும் வரை தாங்கள் மாற்றப்பட்ட விடயம் தெரியாமலே இருந்துள்ளது.

1960களில் கனடாவின் Newfoundlandஇலுள்ள Come By Chance hospital என்ற மருத்துவமனையில், Muriel Stringer என்ற பெண் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து அதற்கு Kent என்று பெயரிட்டார்.

மூன்று நாட்களுக்குப்பின் டாக்சியில் குழந்தையுடன் வீடு திரும்பும் வழியில் தன் குழந்தையைக் கவனித்த Muriel, அது தன் குழந்தையில்லை என்பதை கவனித்து, தன்னுடன் பயணித்த தனது தாயிடம் கூறியிருக்கிறார்.

என் மகனுக்கு தலையில் அடர்த்தியாக கருமையான முடி இருந்தது, இது என் குழந்தை போல் இல்லை என்று கூற, அவரது தாயோ, தொப்பி போட்டிருப்பதால் உனக்கு அடையாளம் தெரியவில்லை பேசாமல் வா என்று அழைத்துச் சென்றுவிட்டார்.

ஆனால், வீட்டுக்கு சென்றதும் Murielஇன் தாய் குழந்தையை குளிப்பாட்டுவதற்காக அதனை சுற்றியிருந்த டவலை அகற்ற, குழந்தையின் கையில், 'Baby Boy Adams', ஒரு நாள், என்று ஒரு டேப்பில் எழுதி ஒட்டப்பட்டிருந்திருக்கிறது.

பதறிப்போன Murielஇன் தாய், அவரிடம் வந்து, நீ சொன்னது சரிதான் இது உன் குழந்தையில்லை என்று கூற, வீடே அதிர்ந்து போயிருக்கிறது. அப்போது வீடுகளில் போன் கிடையாது.

Bruce Tilley/CBC

ஆகவே, அவர்கள் ஊரில் இருந்த தபால் அலுவலகத்திற்கு சென்று, மருத்துவமனையை அழைத்து விவரம் கூற, முதலில், அது உங்கள் குழந்தை இல்லை என்பது உங்களுக்கு எப்படித்தெரியும் என்று கேள்வி எழுப்பிய நர்ஸ் ஒருவர், பின்னர் குழந்தைகள் அறைக்குள் சென்று பார்த்துவிட்டு, உங்கள் குழந்தை இங்குதான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பயமும் பதற்றமுமாக Murielஇன் குடும்பம் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறது. அங்கே Adamsஇன் தாய், குழந்தை பிறந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் தனது குழந்தை மாறிப்போக, பயந்து நடுங்கிப்போய் அமர்ந்திருந்திருக்கிறார்.

கடைசியாக, நல்ல வேளையாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வீடு திரும்பியிருக்கிறார்கள்.

ஆனால், எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே போல் அமைவதில்லையே! அதே மருத்துவமனையில், அதே கால கட்டத்தில் Clarence Hynes மற்றும் Craig Avery என்ற இருவர், தங்களுக்கு 50 வயது தாண்டியபிறகுதான் , தாங்கள் இவ்வளவு நாள் பெற்றோர் என்று அழைத்தவர்கள் தங்கள் பெற்றோர் அல்ல என்ற உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதுவும் DNA சோதனைகளின் அடிப்படையில்... மருத்துவமனைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன...

எப்போதோ நடந்த தவறுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்கிறது மருத்துவமனை! என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றாலும், Hynes மற்றும் Craig இழந்த இளமைக்காலம் திரும்புமா என்ன?

(CBC)

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்