16.8 மில்லியன் டொலர்கள் மோசடி: கனடாவில் இந்திய தம்பதி கைது!

Report Print Balamanuvelan in கனடா
381Shares

கனடாவில் வருவாய்த்துறை அதிகாரிகள் போல் நடித்து 16.8 மில்லியன் டொலர்கள் வரை மோசடியில் ஈடுபட்ட இந்திய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிராம்ப்டனின் வாழும் குரிந்தர் பிரீத் தலிவால் (37) மற்றும் அவரது மனைவி இந்தர் பிரீத் தலிவால் (36) ஆகிய இருவரும் மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றங்களுக்காக ரொரன்றோவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களது கூட்டாளியான, இந்தியாவில் இருப்பதாக கருதப்படும் ஷாந்தனு மாணிக் என்பவரையும் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த தம்பதி, 2014க்கும் 2019க்கும் இடையில் கனேடியர்களைக் குறிவைத்து ஏமாற்றி சுமார் 16.8 மில்லியன் டொலர்கள் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

தங்களை கனடா வருவாய்த்துறை அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு குறிப்பிட்ட நபர்களை தொலைபேசியில் அழைத்து, அவர்கள் வரிபாக்கி வைத்துள்ளதாக கூறி, உடனே அவர்கள் பணத்தைக் கட்டவில்லையென்றால் அவர்களை மிரட்டியதாகவும் கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்