இளைஞர் மீது காரை மோதிய இளம்பெண்: மூளை பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் எழுதிய நெகிழ்ச்சி வார்த்தைகள்!

Report Print Balamanuvelan in கனடா

கார் மோதி படுக்கையில் இருக்கும் ஒரு இளைஞர், மூளை பாதிக்கப்பட்ட நிலையிலும், தன் மீது காரை மோதிய பெண்ணுக்காக சில வார்த்தைகள் எழுதினார்.

அந்த வார்த்தைகள்... ‘நான் எப்போதுமே மன்னிப்பவன்...’ கொஞ்சம் மன அழுத்த பிரச்சினைகள் இருந்ததால், காலார நடந்து விட்டு வரலாம் என புறப்பட்டார் Frederictonஐச் சேர்ந்த Alex Nelson (18).

அதே சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார் அதே பகுதியை சேர்ந்த Hanna Bordage (16).

அங்கு பாதசாரிகள் நடப்பதற்கு இடம் இல்லை, அருகில் பள்ளம்தான் உள்ளது என்பதை கவனித்த Hanna, தான் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதினாலும் பரவாயில்லை, சாலையில் செல்லும் Alex மீது மோதிவிடக்கூடாது என நினைத்து முடிவெடுப்பதற்குள் கார் Alex மீது மோத, பள்ளத்தில் வீசி எறியப்பட்டார் அவர்.

Hanna அப்போதுதான் கார் பயிற்சி முடித்து ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தார். பதறிப்போன Hanna, உடனடியாக காரை நிறுத்திவிட்டு 911ஐ அழைக்க, மருத்துவ உதவிக்குழுவினர் வந்து இரத்த வெள்ளத்தில், முகம் வீங்கிக்கிடந்த Alexஐ மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார்கள்.

Submitted by Terri Taylor

மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த Alexக்கு ஒரு மணி நேர அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டு, அவரது மூளையிலிருந்த இரத்தக்கட்டி ஒன்று அகற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Hanna தன் வீட்டில் நடந்ததைக் கூற, Alexஐப் பார்க்க அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

Hanna மீண்டும் மீண்டும் Alexஇன் தாய் Terri Taylorஇடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

Hanna வந்ததைக் குறித்து Alexஇன் தாய் அவர் காதில் சொல்ல, தாயின் கையை அழுத்தி அவரை அழைத்து Hannaவுக்கு பிரச்சினை ஒன்றும் இல்லையே என்று கேட்டிருக்கிறார் Alex.

என் மகன் உடல் ரீதியாக எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறானோ, அதே அளவுக்கு Hanna உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படிருக்கிறாள், அது அவளது தவறு இல்லை, அது ஒரு விபத்து என்று கூறும் Taylor, சொல்லப்போனால் அவள் என் மகனைக் காப்பாற்றத்தான் முயன்றிருக்கிறாள் என்கிறார்.

இரண்டு குடும்பங்களுமாக சேர்ந்து இந்த சோக நிகழ்வை எதிர்கொள்ளப்போகிறோம் என்கிறார் Taylor.

Alexஇன் மண்டையோட்டின் வலதுபுறம் சில எலும்புகள் நொறுங்கிவிட்டன... இப்போதுதான் நடக்கவும் பேசவும் கற்றுக்கொள்கிறார்... அவரது முகத்தின் வலதுபக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது...

ஆனால், இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையிலும் தன் தாயிடம் பேப்பரும் பேனாவும் கேட்டு வாங்கிய Alex, அதில் தனது கோணலான கையெழுத்தால் இப்படி எழுதியிருக்கிறார்... ‘நான் எப்போதுமே மன்னிப்பவன்...’

Submitted by Terri Taylor

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...