மேகன் ஆதரவில் தான் ஹரி கனடாவில் வாழ முடியும்? தம்பதி வசிக்கபோவது இப்படிதான்... வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் ஹரியும், மேகனும் குடிபெயரும் நிலையில் அங்கு அவர்கள் வசிப்பது தொடர்பிலான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், ஹரி மற்றும் மேகன் அரச கடமைகளில் இருந்து விலகுவதாகவும், தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இதற்கு ராணியும் சம்மதம் தெரிவித்து அறிக்கையினை வெளியிட்டார்.

இந்த சூழலில் ஹரி மற்றும் மேகன் ஆகிய இருவரும் கனடாவுக்கு பறந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் ஒருவரும் ஆறு மாதங்களும் தங்கலாம் அல்லது வேலை விசா மூலம் வெகு காலமும் தங்கலாம்.

இதோடு நிரந்திர வசிப்பிட குடியுரிமை எடுத்தும் கனடாவில் வாழ முடிவெடுத்தால் அதற்கும் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

மேகன் Suits தொடரில் முன்னர் நடிக்கும் போது சில வருடங்கள் கனடாவில் தங்கினார்.

மேகனுக்கு அங்கு நிரந்திர வசிப்பிடத்துக்கான குடியுரிமை இருக்குமேயானால் அவரின் ஆதரவில் குடும்ப மறு ஒருங்கிணைப்பு கனேடிய குடிவரவு திட்டத்தின் கீழ் ஹரி அங்கு குடிபெயர முடியும் என ரைர்சன் பல்கலைக்கழகத்தின் குடிவரவு மற்றும் தீர்வுக்கான மையத்தின் தலைவர் உஷா ஜார்ஜ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஹரியின் திறன்கள், கல்வி மற்றும் பணி அனுபவம் மூலம் மேகன் உதவ முடியும்.

ஹரியிடம் கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்டம் இல்லை, ஆனால் ராயல் மிலிட்டரி அகாடமியில் பங்குபெற்று அவர் பட்டம் பெற்றுள்ளார்.

அதே சமயம் மேகனுக்கு கனடாவில் நிரந்த குடியுரிமை இல்லை என்றால், இங்கு ஹரியுடன் ஆறு மாதங்கள் தங்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...