கனடாவில் 104 வயது பெண் மரணம்! இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் Armenian இனப்படுகொலையில் இருந்து தப்பித்த பெண் 104வது வயதில் காலமானார்.

துருக்கியில் கடந்த 1915ஆம் ஆண்டு பிறந்தவர் Eugenie Papazian.

இவரின் தந்தை அதே ஆண்டில் இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரின் நிலை பின்னர் தெரியவில்லை.

அதே போல Eugenie பிறந்த உடனேயே அவர் தாய் இறந்துவிட்டார்.

1915-ல் Armeniaவில் நடந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிய பின்னரே அவர் துருக்கியில் பிறந்தார்.

Eugenie-வின் குடும்பம் மிக பெரியதாகும். அவருக்கு 2 சகோதரிகள், மூன்று சகோதரர்கள் 3 தாய்வழி அத்தைகள் மற்றும் மாமாக்கள் இருந்தனர்.

ஆனால் அவர்களை எல்லாம் Eugenie பார்த்ததில்லை.

15 வயதில் Garabed என்பவரை மணந்தார் Eugenie. தம்பதிக்கு ஐந்து பிள்ளைகளும், 9 பேர பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கனடாவில் வசித்து வந்த Eugenie மரணமடைந்துள்ளார். இன்னும் நான்கு மாதத்தில் 105வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...