கனடாவில் காணாமல் போனதாக நேற்று அறிவிக்கப்பட்ட 13 வயது சிறுவன்! இன்று பொலிசார் தெரிவித்த தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவின் ரொரன்ரோவில் காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் Cameron Kimber என்ற 13 வயது சிறுவன் McLevin Ave/ Sewells Rd பகுதியில் காணாமல் போனதாக தெரிவித்தனர்.

மேலும் சிறுவன் Cameron Kimber ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரம் கொண்டவன் என தெரிவித்த பொலிசார் அவன் அணிந்திருந்த உடைகளின் நிறங்கள் மற்றும் இதர அங்க அடையாளங்களையும் குறிப்பிட்டு தகவல் வெளியிட்டனர்.

சிறுவன் குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் நேற்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறுவன் Cameron Kimber கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்