தாயை சுட்ட மகன்: நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில் பொலிசார்!

Report Print Balamanuvelan in கனடா

பெண் ஒருவர் அவரது மகனாலேயே சுடப்பட்ட வழக்கில் சுட்டவரோ சுடப்பட்டவரோ ஒத்துழைக்காததால் பொலிசார் நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

வான்கூவர் பகுதியிலுள்ள Oppenheimer பூங்காவின் அருகே ஒரு காரில் ஒரு பெண் சுடப்பட்டார்.

அந்த காரில் அவரது மகன் துப்பாக்கியுடன் இருந்தது தெரியவந்தது.

அந்த 53 வயது பெண் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், நடந்ததை அறிய பொலிசார் விசாரணை நடத்தினர்.

சுமார் ஒரு மாதம் விசாரணை நடத்தியும், அந்த பெண்ணோ அவரது மகனோ என்ன நடந்தது என்று கூறவில்லை.

அவர்கள் ஒத்துழைக்காத நிலையில், துப்பாக்கியால் சுட்டவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் பொலிசாருக்கு காணப்படுகிறது.

எனவே, மகன் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து தற்செயலாக குண்டு பாய்ந்ததாக எடுத்துக்கொண்டுள்ள பொலிசார், அந்த பெண்ணின் மகன் மீது எந்த குற்றச்சாட்டையும் பரிந்துரைக்கவில்லை.

ஆனால், பின்னர் மற்றொரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரது துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்