அமெரிக்கா நோக்கி திரும்பிய கனடா விமானம்... பதறிய பயணிகள்: சுவாரஸ்ய காரணம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் ரொரன்றோவிலிருந்து வான்கூவர் நோக்கி புறப்பட்ட கனடா விமானம் ஒன்று பனிமூட்டம் காரணமாக அமெரிக்கா நோக்கி திரும்ப, விமானத்திலிருந்த பயணிகளில் பெரும்பாலானோர் பதறினார்கள்.

காரணம், அவர்கள் எல்லோரிடமும் கஞ்சா இருந்ததுதான்.

இரண்டு முறை கனடாவில் இறங்க முயற்சித்தும், பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விமானத்தால் தரையிறங்க முடியவில்லை.

எனவே அது அமெரிக்காவின் Seattle விமான நிலையம் நோக்கி திரும்பியது.

Seattleஇல் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, பனிமூட்டம் விலகியதும் வான்கூவரில் இறங்கலாம் என்பது விமானிகளின் திட்டம்.

ஆனால், எதிர்பாராதவிதமாக விமானம் Seattle விமான நிலையத்தில் ஓடுதளத்தைத் தொட்டதும் பழுதானது.

பயணிகள் பதறத் தொடங்கினார்கள்.

அதாவது நீங்கள் கனடாவுக்குள்ளேயே விமானத்தில் பறந்தால், உங்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, சுங்கச் சோதனை கிடையாது, நீங்கள் குறிப்பிட்ட அளவு கஞ்சாவை உங்களுடன் கொண்டு செல்லலாம்.

ஆனால், அமெரிக்காவுக்குள் யாராவது கஞ்சாவைக் கொண்டு வர முயன்றால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

சொந்த உபயோகத்துக்காக கொஞ்சம் கஞ்சாவை நீங்கள் வைத்திருந்தால், உங்களுக்கு 500 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன், அமெரிக்க சுங்கத்துறை அதிகாரி ஒருவர், அமெரிக்காவுக்குள் வாழ்நாள் முழுவதும் நுழைய தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் உங்கள் பெயரை சேர்த்துவிட வாய்ப்புள்ளது.

அதனால்தான் பயணிகள் பயந்து நடுங்கினார்கள்.

ஆனால், நல்லவேளையாக யாரும் சோதனையிடப்படவில்லை.

அத்துடன், தாங்கள் பயணித்ததை விட பெரிய சைஸ் விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு வான்கூவருக்கு அனுப்பிவைக்கப்பட, நிம்மதிப்பெருமூச்சு விட்டார்கள் அனைவரும்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்