79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வாழ்ந்து வந்த பிரித்தானியர் ஒருவர், தான் தன் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் தனிமை அவரை வாட்டியது.

அப்போது அவரும் அவரது மனைவியும் தங்களுக்கு பரிசாக கிடைத்த DNA கிட் ஒன்றை பயன்படுத்தி, தங்கள் மூதாதையர்களை அறிந்துகொள்வதற்காக DNA பரிசோதனை செய்துகொண்டார்கள்.

வான்கூவரில் வாழ்ந்துவந்த Tony Weall (79) என்பவரும் அவரது மனைவி Pat Cryderம்தான் அந்த தம்பதி. ஆறு வாரங்களுக்கு பிறகு சோதனையின் முடிவுகள் வந்த நிலையில், லண்டனிலிருந்து சைமன் என்னும் ஒருவர் Tonyக்கு இமெயில் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அவரும் DNA பரிசோதனை செய்துகொண்டதிலிருந்து தாங்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளதாக சைமன் Tonyயிடம் தெரிவித்திருந்தார்.

அப்படிப்பார்த்தால், Tonyக்கு தன்னை விட நெருங்கிய உறவினர்கள் இருவர் இருப்பதாக தெரிவித்திருந்தார் சைமன்.

அதாவது தனக்கு லண்டனில் இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது தெரியவர, ஒரே பிள்ளையாக வளர்ந்த Tonyக்கு மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அடக்கமுடியவில்லை. ஆனால் Tonyக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.

அதாவது தன்னை வளர்த்தவர் தன்னுடைய தந்தையல்ல என்பதுதான் அது. Tonyயின் உண்மையான தந்தையின் பெயர் Sam என்றும், அவருக்கு பிறந்த Susan மற்றும் Linda என்னும் இரண்டு பிள்ளைகள் லண்டனில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவர, ஆயிரம் கேள்விகள் அவர் மனதில்.

1947ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயரும் முன் Tonyயின் பெற்றோர் Essexஇல்தான் வாழ்ந்து வந்தார்கள்.

போர் துவங்கும் காலத்தில் Essexஇல் பிறந்த Tony வாழ்ந்த அதே பகுதியில்தான், 24 வயதான Sam திருமணமாகாத நிலையில் தனது பெற்றோர் மற்றும் எட்டு சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது Tonyயின் தாய் Marge (30)ம் Sam பணிபுரிந்த அதே இடத்தில் பணிபுரிந்துள்ளார். Margeக்கு திருமணமாகி பத்தாண்டுகளாக குழந்தை இல்லை.

அப்படியிருக்கும் நிலையில், தனது கணவனால் தனக்கு ஒரு குழந்தையை பெற்றுத்தர இயலாது என்பதால் வேண்டுமென்றே Marge, Sam மூலம் கருவுற்றாரா?

பல ஆண்டுகளுக்குப்பின் கணவன் இறந்ததும், தனது குடும்பத்தை சந்திப்பதற்காக இங்கிலாந்துக்கு சென்ற Marge தனது மகனின் உண்மையான தந்தையை தேடித்தான் சென்றாரா? அவர்கள் இருவரும் சந்தித்தார்களா? அவர்கள் தொடர்ந்து தொடர்பிலிருந்தார்களா? அல்லது Samக்கு தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற விடயமே கடைசி வரை தெரியாதா? எந்த கேள்விகளுக்கான பதிலையும் தெரிந்து கொள்ள முடியாது, காரணம் அவர்கள் யாருமே இப்போது உயிருடன் இல்லை.

விடை தெரியாத இத்தனை கேள்விகளுக்கு நடுவில் Tony போராடிக்கொண்டிருந்தபோது Susanம் Lindaவும் அவரை தொடர்புகொண்டார்கள்.

நீங்கள் உண்மையாகவே எங்கள் அண்ணனக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று இமெயிலில் ஒரு செய்தி அனுப்பியதோடு, தங்கள் தந்தையின் புகைப்படம் ஒன்றையும் அனுப்பி வைத்தார்கள் சகோதரிகள். அந்த புகைப்படத்தை பார்த்த Tony அதிர்ந்துபோனார்.

அதில் இருந்தவர் அப்படியே Tonyயைப்போலிருந்தார். பின்னர் ஸ்கைப் மூலம் தொடர்புகொண்டு அண்ணனும் தங்கைகளும் பேசிக்கொள்ள, லண்டனுக்கு வந்து 15 நாட்கள் தங்களுடன் தங்கிச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார்கள் தங்கைகள்.

குடும்பத்துடன் லண்டனுக்கு செல்லும்போது, இதுவரை பழகாத குடும்பத்துடம் தங்கப்போகிறோமே, எப்படிப்பட்ட அனுபவமக இருக்குமோ என்ற சந்தேகத்துடன்தான் Tony புறப்பட்டிருக்கிறார்.

ஆனால் லண்டன் சென்று இறங்கியதும், எல்லாமே மாறிப்போனது. உடனடியாக கண்ணீர் விட்டு கதறாவிட்டாலும், எல்லோர் கண்களிலும் நீர் பனித்ததை யாரும் மறைக்கவில்லை.

தங்களுக்கு தங்கள் அண்ணன் கிடைத்துவிட்டார், இனி அவரை தனியாக விடமாட்டோம் என்கிறார்கள் Susanம் Lindaவும்.

Tonyயோ, எனது பெற்றோர்கள் இறந்ததிலிருந்தே நான் தனிமையாக இருப்பதாகத்தான் உணர்ந்தேன், ஆனால் Samக்கு எட்டு சகோதர சகோதரிகள் இருக்கும் நிலையில், தனது குடும்பம் இப்போது மிகப்பெரியதாகிவிட்டது என்பதை அறியும்போது, அது தனக்குக் கிடைத்த அருமையான ஒரு பரிசு என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்