கருவில் இருந்த குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை.. கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கர்ப்பமாக இருந்த முன்னாள் மனைவி வயிற்றில் 12 முறை கூரான கரண்டியால் குத்தி அவர் கருவில் இருந்த குழந்தையை கொலை செய்த நபர் மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

மொண்ரியல் நகரை சேர்ந்தவர் சோபைன் கசி. இவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் சண்டை ஏற்பட்டு பிரிந்தார்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 24ஆம் திகதி போதையில் மனைவியை காண வந்தார்.

அப்போது வீட்டை விட்டு வெளியேறுமாறு அவர் கூற ஆத்திரமடைந்த கசி 36 வாரம் கர்ப்பிணியாக இருந்த முன்னாள் மனைவி வயிற்றில் கூரான கரண்டியை கொண்டு 12 முறை குத்தியுள்ளார்.

இதையடுத்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து கருவில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் வெளியில் எடுத்த நிலையில் சில நிமிடங்கள் உயிரோடு இருந்த குழந்தை பின்னர் உயிரிழந்தது.

குழந்தையின் தாய் தீவிர சிகிச்சைக்கு பின்னர் பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் உடல் நலம் தேறினார். இதையடுத்து கருவில் இருந்த குழந்தையை கொலை செய்ததாக கசியை பொலிசார் கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது அவர் குற்றவாளி என கிட்டத்தட்ட முடிவாகியுள்ளது.

இதையடுத்து கசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதோடு, 10 ஆண்டுகள் பரோலில் வெளியில் வராதபடி தண்டனை பிறப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்