கனடாவில் குடிபெயர்ந்த ஆசிய நாட்டவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! 10 மாதங்களுக்கு பின்னர் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Raju Raju in கனடா

ஆசிய நாடான வியட்னாமில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த நபருக்கு லொட்டரியில் $60 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

வியட்நாமை சேர்ந்தவர் போன் ட்ருயோங். இவர் கனடாவுக்கு 70களில் குடிபெயர்ந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக வாரம் ஒரே எண்களை கொண்ட லொட்டரி சீட்டுகளை வாங்குவதை ட்ருயோங் வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்படி அவர் Edmonton நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதி லொட்டரி விளையாடினார்.

இதில் அவருக்கு பம்பர் பரிசாக $60 மில்லியன் விழுந்தது.

இது குறித்து தனது மனைவியிடம், லொட்டரியில் தனக்கு பரிசு விழுந்தது என கூறிய அவர் பரிசு தொகை குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை.

இதனிடையில் பல மாதங்களாக பரிசு தொகையை பெறாமல் இருந்த ட்ருயோங் ஒருவழியாக நேற்று லொட்டரி நிறுவனத்துக்கு சென்று பரிசை பெற்று கொண்டார்.

ட்ருயோங்கின் மூன்று பிள்ளைகளும் கூறுகையில், எங்கள் தந்தை மிக பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்பதை எங்களிடமும் கூறவில்லை, இது குறித்து எங்களுக்கு தெரியவே தெரியாது என கூறினர்.

ட்ருயோங் கூறுகையில், குடும்பத்தாரிடம் அவசரமாக இது குறித்து கூறவேண்டும் என நினைக்கவில்லை.

இந்த பணத்தை வைத்து கடனை அடைப்பேன், பின்னர் குடும்பத்தாருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்