முழுக்குடும்பத்தையும் கொலை செய்த கனேடியர் வழக்கு: மரணத்திற்கான காரணத்தை வெளியிட பொலிசார் மறுப்பு!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் தனது குடும்பம் முழுவதையும் இளைஞர் ஒருவர் கொலை செய்த வழக்கில் உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதை வெளியிட முடியாது என பொலிசார் மறுத்து விட்டனர்.

கனடாவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த Menhaz Zaman(23) என்பவர், தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரைக் கொலை செய்தார்.

அவர் இணையத்தில் ஒரு குழுவுடன் விளையாடுபவர் என்பதால், அந்த குழுவினருடன் தனது எண்ணங்களை பகிர்ந்தபடி இருந்திருக்கிறார்.

அவர் மோசமான செயல்கள் எதிலாவது ஈடுபடலாம் என சந்தேகித்த அவரது சக விளையாட்டு நண்பர்கள், பொலிசாருக்கு தகவலளித்தனர்.

ஆனால் பொலிசார் சரியான நேரத்திற்கு வராமல் போகவே, Menhaz Zaman தனது குடும்பம் முழுவதையும் கொலை செய்வதை அவர்களால் தடுக்க முடியாமல் போய்விட்டது.

பொலிசார் அவரை கைது செய்து காவலில் அடைத்த நிலையில், நேற்று அவர் Newmarket நீதிமன்றத்தில் காணொளி கலந்தாய்வு முறையில் ஆஜர் செய்யப்பட்டார்.

மீண்டும் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றம் முன் Zaman ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், Zamanஇன் குடும்பத்தினர் நால்வரின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து விட்டதாகவும், ஆனால் அதை வெளியிடுவது வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதை வெளியிட முடியாது என்று பொலிசார் கூறிவிட்டனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்