இனி ராஜா போல வாழுவேன்! 84 வயது முதியவருக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்

Report Print Raju Raju in கனடா

கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியாவின் லொட்டரி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு $60 மில்லியன் பரிசை 84 வயது முதியவர் தட்டி சென்றுள்ளார்.

பிரிட்டீஸ் கொலம்பியாவை சேர்ந்தவர் ஜோசப் காத்தலினிக் (84). இவர் கடந்த மாதம் 26ஆம் திகதி லொட்டரி சீட்டுகளை வாங்கினார்.

இதன் குலுக்கல் சமீபத்தில் நடந்த நிலையில் ஜோசபுக்கு பம்பர் பரிசாக $60 மில்லியன் விழுந்துள்ளது.

பிரிட்டீஸ் கொலம்பியா வரலாற்றிலேயே இது தான் மிக பெரிய ஜாக்பாட் பரிசு தொகை என லொட்டரி கார்ப்பேரிஷன் தெரிவித்துள்ளது.

வெற்றி களிப்பில் இருந்த ஜோசப் கூறுகையில், ராஜா போல வாழ வேண்டும் என திட்டமிட்டுள்ளேன்.

பரிசு விழுந்தவுடன் முதலில் என் மகளிடம் தான் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டேன்.

பரிசு பணத்தை வைத்து முதலில் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்துக்கு செல்லவுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்