கனேடிய சீரியல் கில்லர்கள் இதனால்தான் இறந்தார்களாம்: வெளியானது உடற்கூறு அறிக்கை!

Report Print Balamanuvelan in கனடா

மூன்று பேரைக் கொன்ற கனேடிய சீரியல் கில்லர்களின் உடற்கூறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கரான Chynna Deese, அவரது காதலரான அவுஸ்திரேலியரான Lucas Fowler மற்றும் வான்கூவரைச் சேர்ந்த Leonard Dyck ஆகிய மூவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.

அவர்கள் மூவரையும் கொலை செய்ததாக தேடப்பட்டு வந்த Bryer Schmegelsky மற்றும் Kam McLeod என்னும் இரண்டு இளைஞர்களின் உடல்கள் நெல்சன் நதிக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர் அவர்களது உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பொதுவாக கனேடிய பொலிசார் இத்தகைய முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், உடற்கூறு ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

நேற்று மாலை பொலிசார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், Gillam பகுதிக்கு வெளியே, நெல்சன் நதிக்கருகில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள், தலைமறைவாக இருந்த Bryer Schmegelsky (18) மற்றும் Kam McLeod (19) என்பவர்களுக்கு சொந்தமானவைதான் என்பது உடற்கூறு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர்கள் இருவரும் இறந்து கிடந்த இடத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கிடைத்ததாகவும், அவற்றைக் கொண்டு தங்களைத் தாங்களே சுட்டு அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் இருவரும் எப்போது இறந்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும், கடைசியாக அவர்கள் காணப்பட்டபின், பொலிசார் அவர்களை Gillam பகுதியில் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில், நிச்சயம் அவர்கள் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இறந்தவர்களின் அருகில் கண்டெடுக்கப்பட்ட அதே துப்பாக்கிகள்தான் கொலை செய்யப்பட்ட மூவரையும் கொல்வதற்கும் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்த ஆய்வு தொடர்கிறது.

இதற்கிடையில், உயிரிழந்த, குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களில் ஒருவரான, Bryer Schmegelskyயின் தந்தை, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களிடம், உணர்ச்சி பொங்க, கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.