மருந்து தொடர்பில் கனடாவின் முக்கிய அறிவிப்பு..! மிகப்பெரிய சீர்திருத்தம் என பாராட்டு

Report Print Kabilan in கனடா

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கான விதிமுறைகளை கனடா அறிவித்துள்ளது.

கனேடிய அரசாங்கம் காப்புரிமை பெற்ற மருந்து விலையை குறைப்பதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்மூலம் கனடியர்கள் ஒரு தசாப்த காலத்தில் சுமார் 13.2 பில்லியன் கனேடிய டொலர்களை மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 1987ஆம் ஆண்டில் இருந்து, கனடாவின் மருந்து விலை தொடர்பில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம் மருந்து நிறுவனங்களின் லாபங்களில் இருந்து நோயாளிகள், தொழிலாளர்கள், காப்பீட்டாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகியோர் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

அரசின் இந்த அறிவிப்பை, கனேடிய ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக் கழகம் ‘அனைத்து கனேடியர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட மருந்து செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை’ என்று கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த விதிமுறை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜினெட் பெடிட்பஸ் டெய்லர் கூறுகையில், ‘இந்த விதிமுறைகளை முன்னெடுப்பதன் மூலம், கனடாவில் மருந்துகளின் விலையை குறைக்க ஒரு தலைமுறையின் மிகப்பெரிய நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்