கனடாவுக்கு பெரும் ஆபத்து.... அகதி தொடர்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட அதிகாரிகள்

Report Print Arbin Arbin in கனடா
398Shares

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளரை விடுவிப்பது நாட்டுக்கே பெரும் ஆபத்தாக முடியும் என அதிகாரிகள் வாதிட்டுள்ளனர்.

சீரமைக்க முடியாத பேரிழப்பு ஏற்படும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் அதிகாரிகள், பொதுநலன் கருதி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளரை விடுவிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொலம்பியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள Othman Ayad Hamdan என்ற ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவாளரை விடுவிக்க நீதிமன்றம் 25 நிபந்தனைகள் விதித்துள்ளது.

ஹம்தானை விடுவிப்பது தொடர்பில் ஆகஸ்டு 12 ஆம் திகதி நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரியவந்துள்ளது.

ஜோர்டான் நாட்டவரான 37 வயது ஹம்தான் கடந்த 2002 ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து இவரது கோரிக்கையை ஏற்று 2004 ஆம் ஆண்டு கனேடிய அரசு அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.

இதனிடையே அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நிலையில், அவரது வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில் கனடாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதலின்போது ஹம்தான் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஆதரித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இவர் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத வழக்கானது போதிய ஆதாரங்கள் இன்றி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே 2017 ஆம் ஆண்டு கனடா எல்லை பாதுகாப்பு படையினர், ஹம்தான் நாட்டுக்கே அச்சுறுத்தல் என கூறி அவரை நாடுகடத்த உத்தரவிட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்