கனடாவை உலுக்கிய மூவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: இறுகும் விசாரணை

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆதாரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள பொலிசார், இது மூவல் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என குறிப்பிட்டுள்ளனர்.

Gillam அருகே நெல்சன் ஆற்றில் சேதமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட அலுமினிய படகை அடுத்து, தேடுதலில் களமிறங்கிய பொலிசார், தற்போது அந்த கொலை வழக்கு தொடர்பில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறப்பு குழுவினரை இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும், நெல்சன் ஆற்றின் குறிப்பிட்ட பகுதியில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக குறிப்பிட்ட பகுதியை பொலிசார் கண்காணித்து வந்துள்ளனர். மூவர் கொலையில் சந்தேகிக்கப்படும் ஷ்மேகல்ஸ்கி மற்றும் மெக்லியோட் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை.

கடந்த வாரம் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களும் பயன்படுத்தியதாக கூறும் வாகனம் ஒன்று தீயில் கருகி சேதமடைந்த நிலையில் Gillam பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

இதனையடுத்தே பொலிசார் Gillam பகுதியில் தங்கள் தேடுதல் வேட்டையை வேகப்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் கனடாவுக்கு சுற்றுலா வந்த அவுஸ்திரேலியரான 23 வயது Fowler மற்றும் அவரது காதலியான அமெரிக்க இளம்பெண் Deese ஆகிய இருவரும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இவர்கள் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் முதியவர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்ட நிலையில்,

மாயமானதாக பெற்றோரால் புகார் அளிக்கப்பட்ட ஷ்மேகல்ஸ்கி மற்றும் மெக்லியோட் ஆகிய இரு இளைஞர்கள் மீது சந்தேகத்தின் பேரில் பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்