ஆறு மாத கப்பல் பயணத்திற்குப்பின் காதலரை வரவேற்க சென்ற காதலி: காதலர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in கனடா

கடற்படையில் பணிபுரிவோர் நாடு திரும்பும்போது ஒவ்வொரு முறையும், அவர்களை துறைமுகத்திற்குச் சென்று வரவேற்பது அவர்கள் குடும்பங்களுக்கு மட்டும் சளைக்கவே சளைக்காது எனலாம்.

அப்படிப்பட்ட ஒரு ’வரவேற்பு நிகழ்ச்சியில்’ தன்னை வரவேற்க வந்த காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தார் ஒரு கடற்படை வீரர்.

பல குடும்பங்கள் தங்கள் தந்தையை, கணவனை, சகோதரனை, மகனை காண வந்திருந்தாலும் எல்லோருடைய கண்களும் ஒரு குறிப்பிட்ட வீரரைத்தான் அன்று கவனித்தன எனலாம்.

HMCS Toronto என்னும் கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தை வந்தடைந்த போது, ஆறு மாதங்களுக்குப் பின் திரும்பும் தங்கள் உறவினர்களை வரவேற்க ஒரு கூட்டம் கூடியிருந்தது.

அவர்களில் தனது காதலர் டியூரெட்டுக்காக காத்திருந்த அலெக்சாண்ட்ராவும் ஒருவர். ஆனால் கூட்டத்தில் ஒருவராக தான் நின்றாலும், தான்தான் அன்றைய கதாநாயகி என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கப்பலிலிருந்து இறங்கும் ஒவ்வொருவரையாக பார்த்துக் கொண்டிருந்த அலெக்சாண்ட்ராவின் முகம், தனது காதலர் டியூரெட்டைக் கண்டதும் மலர்கிறது.

தன் காதலியை நோக்கி ஓடோடி வந்த டியூரெட்டும் அவரை கட்டிக் கொள்கிறார், முத்தமும் இடுகிறார்.

ஆனால், அடுத்து அவர் செய்ததை அலெக்சாண்ட்ரா எதிர்பார்க்கவில்லை. தனது தொப்பியைக் கழற்றிய டியூரெட், அலெக்சாண்ட்ரா முன் முழங்காலிடுகிறார். நடப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போய் நிற்கிறார் அலெக்சாண்ட்ரா.

தனது கையில் தயாராக வைத்திருந்த மோதிரத்தை (முதலில் கீழே போட்டு விட்டார் என்றாலும்) டியூரெட் நீட்டி, எண்ணை மணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க, கண்ணீருடன் சரி என்கிறார் அலெக்சாண்ட்ரா.

தாங்கள் காதலிப்பது உண்மைதான் என்றாலும், இம்முறை விடுமுறையில் வருபோது அவர் புரபோஸ் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என்று ஆனந்தக் கண்ணீருடம் கூறுகிறார் அவர்.

அத்தனை கூட்டமும், தாங்களும் தங்கள் உறவினர்களை வரவேற்க வந்திருக்கிறோம் என்பதை மறந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தம்பதியை உற்சாகப்படுத்தியதுதான் அன்றைய நிகழ்வின் உச்சகட்டம்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்