ரொரன்ரோ குடியிருப்பு ஒன்றில் அதிகாலையில் கேட்ட துப்பாக்கி சத்தம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in கனடா
249Shares

கனடாவின் ரொரன்ரோ பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நபர் ஒருவரை பொலிசார் மீட்டுள்ளனர்.

ரொரன்ரோவில் பேவியூ அவென்யூவின் தெற்கே மற்றும் யார்க் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து காலை 6 மணியளவில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

துப்பாக்கி சத்தம் கேட்டதாக கூறப்பட்ட குடியிருப்பானது Airbnb சார்பில் வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவலை அடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரை மீட்டுள்ளனர்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக ரொரன்ரோ மருத்துவ உதவுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அந்த நபர் ஆபத்து கட்டத்தை கடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Airbnb சார்பில் சொகுசான குடியிருப்புகள் பல வாடகைக்கு விடப்படுகிறது. அதில் ஒரு குடியிருப்பிலேயே துப்பாக்கி தாக்குதல் நடந்துள்ளது.

தற்போது சம்பவம் நடந்த குடியிருப்பை வாடகைக்கு எடுத்த அந்த நபர் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தின்போது அந்த குடியிருப்பில் சுமார் 20 முதல் 30 நபர்கள் வரை இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது அவர்கள் ஒவ்வொருவரையும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காலை ஆறு மணிக்கு இத்தனை பேர் ஏன் அந்த குடியிருப்பில் குவிந்திருந்தனர் என்பது குறித்து விசாரிக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அந்த குடியிருப்பில் மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு 2 மனியில் இருந்தே அந்த குடியிருப்புக்கு கார்கள் பல வந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி விடிய விடிய பாட்டு சத்தமும் கேட்டதாக தெரிவித்துள்ளனர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் அங்கிருந்த பலர் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறுவதை கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணி தொடர்பிலும் விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்