கனடாவில் முக்கிய பதவிக்கு தெரிவான இலங்கைத் தமிழர்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஒன்ராறியோ பிராந்தியத்தின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா என்ற தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மொத்தம் 25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான் துரையப்பா, குற்றவிசாரணை பிரிவின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கையாண்டுள்ளார்.

தற்போது மூவாயிரம் பேரை கொண்ட பீல் நகர பொலிஸ் சேவையில் முக்கிய தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிஷான் துரையப்பா, யாழ் முன்னாள் மேயர் ஆல்பிரெட் துரையப்பாவின் பேரன் என்பதும், தமது மூன்று வயதில் அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்