கனடாவில் எனக்கு பிடித்த நகரம்... மஹேலா ஜெயவர்தனே வெளியிட்டு வைரலான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரை இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் கண்டுகளித்துள்ள நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.

இந்த தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ், மொண்றியல் டைகர்ஸ், வின்னிபெக் ஹவுக்ஸ் உள்ளிட்ட ஆறு அணிகள் இடம்பிடித்துள்ளன.

இந்த வருடத்துக்கான தொடர் கடந்த 25ஆம் திகதி தொடங்கிய நிலையில் வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் காண இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே கடனாவின் டொரண்டாவுக்கு சென்றுள்ளார்.

இது குறித்த அவரின் சமூகவலைதள பதிவில், குளோபல் டி20 கிரிக்கெட் தொடரை காண டொரண்டோவுக்கு சென்று கொண்டிருக்கிறேன், இது எனக்கு பிடித்தமான நகரங்களில் ஒன்று, இங்கு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது ஜாலியாக இருக்கும் என கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்