சொந்த மகனால் படுகொலை செய்யப்பட்ட கனேடிய பெற்றோரின் உடல் நல்லடக்கம்: கண்ணீருடன் விடையளித்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்கள் பொதுமக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஞாயிறன்று மீட்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 23 வயது மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞரை பொலிசார் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அதேவேளை, கொல்லப்பட்ட 70 வயதான ஃபிரோசா பேகம், 50 வயதான மொம்தாஸ் பேகம், 59 வயதான மோனிருஸ் ஜமான் மற்றும் 21 வயது மலேசா ஜமான் ஆகிய நால்வரின் உடல்கள் இன்று ஸ்கார்பாரோவில் உள்ள இஸ்லாமிய அறக்கட்டளை மசூதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கொல்லப்பட்ட குடும்பத்தினரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

23 வயதான ஜமான் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி காணொளி மூலம் இன்று நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

ஜமான் குடும்பத்தாரின் நெருங்கிய நண்பர் ராபின் இஸ்லாம் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனவும்,

பெற்றோர் தங்கள் மக்களுடன் மனந்திறந்து பேச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்