மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கனேடிய மருத்துவர்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் விவாகரத்து கோரிய மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற மருத்துவர் ஒழுங்கு விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் ரொரன்ரோ பகுதியில் உள்ள நரம்பியல் மருத்துவர்களில் பிரபலமானவர் முகமது ஷாம்ஜி. இவரே மனைவியை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவதுறையின் ஒழுங்கு விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார்.

மேலும், மருத்துவராக தனித்துப் பணியாற்ற கோரி கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் அளித்துள்ள விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், 2005 ஆம் ஆண்டு தன்மீதான குற்றவியல் வழக்கு தொடர்பிலும் இவர் உண்மையை மறைத்துள்ளதாக மருத்துவத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விவாகரத்து கோரிய இவரது மனைவி 40 வயதான எலனா ஃப்ரிக் ஷாம்ஜி என்பவரை, தூக்கத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை ஒரு பெட்டியில் எடுத்துச் சென்று 35 கி.மீ தொலைவில் உள்ள ஹம்பர் ஆற்றில் வீசியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

ஷாம்ஜி மருத்துவரான எலனா ஃப்ரிக்-ஐ திருமணம் செய்து கொண்ட துவக்க நாட்களில் இருந்தே தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் மனமுடைந்த எலனாவின் தாயார், தமது மகளிடம் விவாகரத்து செய்துகொள்ள நிர்பந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் குழந்தை பிறந்த பின்னர் சில மாத காலம் மருத்துவர்களான இருவரும் பிரிந்து வழ்ந்துள்ளனர். பின்னர் உறவினர்களின் நிர்பந்தம் காரணமாக இருவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

தற்போது ஆயுள் தண்டனையை எதிர்கொண்டுவரும் மருத்துவர் முகமது ஷாம்ஜி, அடுத்த 14 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...