கனடாவில் மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு இணையத்தில் தகவல் பரப்பிய இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் மொத்த குடும்பத்தையும் கொலை செய்த இளைஞர், தான் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாக தனது குடும்பமே நம்பிக் கொண்டிருக்க, உண்மையில் தான் ஒரு மாலில் போய் உட்கார்ந்து விட்டு வருவதாகவும், அந்த உண்மை தெரிந்து, தன்னைப் போன்ற ஒரு மகனை பெற்றதற்காக தனது குடும்பம் வெட்கப்படக்கூடாது என்று விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் மார்க்கம் பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த Menhaz Zaman (23), இணையத்தில் விளையாடும் மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளத்தில் சில கவலைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தான் ஒரு பரிதாபத்துக்குரிய கோழை, மனிதனைவிட கீழானவன் என கழிவிரக்கத்துடன் அவர் செய்திகளை பதிவேற்றம் செய்த வண்ணம் இருந்திருக்கிறார்.

தான் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து வருவதாக தனது பெற்றோர் நம்பிக் கொண்டிருக்க, உண்மையில் தான் ஒரு மாலில் போய் உட்கார்ந்து விட்டு வருவதாகவும், அந்த உண்மை தெரிந்து என்னைப் போன்ற ஒரு மகனை பெற்றதற்காக எனது பெற்றோர் வெட்கப்படக்கூடாது என்று விரும்பினேன் என்றும் Menhaz கூறியுள்ளார்.

செய்திகளின் தொனியில் உள்ள அபாயத்தை உணர்ந்த சக இணைய நண்பர் ஒருவர், உடனடியாக அவரது முகவரியை ட்ரேஸ் செய்து, உள்ளூர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

ஆனால் பொலிசார் அந்த வீட்டுக்கு செல்லும்போது எல்லாமே முடிந்து விட்டிருந்தது. Menhaz, தனது தந்தை, தாய், தங்கை மற்றும் பாட்டி என தனது குடும்பம் மொத்தத்தையுமே கொலை செய்து விட்டிருந்தார்.

சம்பவ இடத்திலேயே இருந்த Menhazஐ பொலிசார் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர்.

அவர் நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நாளை நீதிபதி முன் ஆஜராகிறார். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர்களின் அடையாளங்களை பொலிசார் முறைப்படி வெளியிட்டுள்ளார்கள்.

இறந்தவர்கள் Firoza Begum (70), Momotaz Begum (50), Moniruz Zaman (59) மற்றும் Malesa Zaman (21) என பொலிசார் தெரியப்படுத்தியிருந்தாலும், அவர்களுக்கு Menhazஉடன் என்ன உறவு என்பதையோ, கொலைக்கான காரணத்தையோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால், அந்த குடும்பத்தினரின் நண்பர்கள், உயிரிழந்தவர்கள் Menhazஇன் தந்தை, தாய், தங்கை மற்றும் பங்ளாதேஷிலிருந்து வந்திருந்த அவரது பாட்டி என்று தெரிவித்துள்ளனர்.

நாளை Menhaz, வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் ஆஜராக உள்ள நிலையில், அதன் பிறகே வழக்கு குறித்த மேல் விவரங்கள் வெளியாகும் என கருதப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்