வெளிநாட்டில் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய கனேடியர் விடுவிப்பு: வெடித்த சர்ச்சை

Report Print Arbin Arbin in கனடா

இந்தோனேசியாவில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய கனேடிய ஆசிரியரை கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் இந்தோனேசிய நீதித்துறையில் முறைகேடுகள் நிறைந்துள்ளதை வெளிச்சமிட்டு காட்டுவதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.

ஆனால் தாம் செய்யாத குற்றத்திற்கு நீண்ட 5 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ளதாக கூறும் நீல் பாண்டில்மேன், கருணை அடிப்படையில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ தம்மை விடுவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கருணை மனு மீதான ஜனாதிபதியின் உத்தரவில், நீல் பாண்டில்மேனின் சிறை தண்டனை காலத்தை 11 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அவர் மீது விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையான 7,100 டொலரை உடனடியாக செலுத்தவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கைதான இருவரும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஓராண்டு சிறை தண்டனைக்கு பின்னர் கடந்த 2015 ஆகஸ்டு மாதம் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் இந்தோனேசிய உச்ச நீதிமன்றம் கனேடியர் உள்ளிட்ட இருவரின் விடுதலையை ரத்து செய்ததுடன், இருவரையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்தே நீல் பாண்டில்மேன் சார்பாக ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கப்பட்டது.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மிகவும் பிரபலமான பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் கனேடியரான நீல் பாண்டில்மேன்.

குறித்த பாடசாலையில் இந்தோனேசியாவில் உள்ள பெரும் செல்வந்தர்கள், உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து பணி நிமித்தம் குடியேறியுள்ளவர்களின் பிள்ளைகள் மட்டுமே பெரும்பாலும் கல்வி பயின்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நீல் பாண்டில்மேன் மற்றும் அவருடன் பணியாற்றிய ஃபெர்டினாண்ட் ஜியோங் ஆகிய இருவரும் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் இருவருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பானது.

தற்போது கருணை அடிப்படையில் நீல் பாண்டில்மேன் விடுதலை பெற்றுள்ளார். ஆனால் கனேடியருடன் தண்டனை பெற்ற உதவி ஆசிரியர் ஃபெர்டினாண்ட் ஜியோங் கருணை மனு அளிக்க மறுத்ததுடன், அது தாம் குற்றம் செய்ததை ஒப்புக்கொள்வதாக புரிந்துகொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது சகோதரர் நீல் பாண்டில்மேன் பத்திரமாக கனடா திரும்பியதாக அவரது சகோதரர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...