சொந்த மகளையும் தோழியையும் துஷ்பிரயோகம் செய்த நபர்: வழக்கில் தீர்ப்பு!

Report Print Balamanuvelan in கனடா

ஒண்டாரியாவோவைச் சேர்ந்த ஒருவர் தனது சொந்த மகளையும் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாமல் J.S என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நபர், தன மனைவியை பிரிந்து வாழும் நிலையில், தன்னைக் காண வரும் மகளிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

அந்தப் பெண் தடுத்தும் அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். அதேபோல் குடும்ப நண்பரான ஒரு பெண்ணையும் அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போலவே அந்த வீட்டில் தங்கி வந்த அந்த இளம்பெண், ஒரு நாள் பார்ட்டி ஒன்றிற்கு சென்று வரும்போது, போதையில் இருக்கும்போது அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார் அவர்.

அந்த பெண் சிறுவயதாக இருக்கும்போதே அந்த வீட்டில் தங்கியிருந்ததால், அவர் மீது ஏற்பட்ட ஒரு ஈர்ப்பை பயன்படுத்தி அவளை துஷ்பிரயோகம் செய்துள்ளார் அவர்.

நம்பிக்கைக்குரியவராக இருக்கும் ஒரு நபர், அந்த பெண்களின் இளமையையே திருடிவிட்டதாக தெரிவித்துள்ள நீதிபதி, அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதோடு, 10 ஆண்டுகளுக்கு ஆயுதங்கள் எதையும் வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளவும் தடை விதித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை பரிசோதித்த மன நல மருத்துவர் ஒருவர், அவர் சிறுவர்களுடன் பாலுறவு கொள்வது தவறு என்பதை அறிந்துள்ளார்.

ஆனால், தான் செய்துள்ள செயல்கள் குழந்தைகளின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூட உணர இயலாதவராக இருப்பதோடு, சம்மதத்தின் பேரில் உறவு வைத்துக் கொள்வது என்றால் என்ன என்பது குறித்து அரை குறை அறிவு உடையவராகவும், குழந்தைகள் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க இயலாது என்பது கூட தெரியாதவராகவும்

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்