கனடாவில் பெற்றோரை பிரிந்து சாலையில் வசித்த சிறுவனுக்கு நடந்தது என்ன? கண்ணீர் தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெற்றோரை பிரிந்து வந்து சாலையில் வசித்த 16 வயது சிறுவனை மர்ம நபர் கத்தியால் குத்திய நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

பிரிட்டீஸ் கொலம்பியாவை சேர்ந்தவர் ரூபின் பியூர்கர்ட். இவர் தனது மனைவி மற்றும் இலிஜா லயன் (16) என்ற மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ரூபின் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் வசிக்க தொடங்கினார்.

இதனிடையில் கடந்த வியாழன் அன்று இலிஜாவை யாரோ கத்தியால் குத்தினார்கள்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இலிஜா நேற்று முன் தினம் தனது பெற்றோர் கையில் உயிரிழந்தார்.

இது குறித்து ரூபின் கூறுகையில், தனியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என கூறி எங்களை பிரிந்து இலிஜா மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியில் சென்றான்.

சில சமயம் அதிக சுதந்திரம் உயிரை பறித்து விடுகிறது. எங்கள் கைகளில் தான் அவன் உயிர் பிரிந்தது என கூறியுள்ளார்.

இதனிடையில் இலிஜாவுக்கு நன்கு அறிமுகமானவர் தான் அவரை கத்தியால் குத்தினார் என பொலிசார் கூறியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers